முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு
நாளை காவல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறவுள்ளது.
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை (ஏப். 28) நடைபெறவுள்ளது. பேரவை அன்றைய தினம் காலை 9.30 மணிக்குக் கூடியதும் நேரமில்லாத நேரம் நடைபெறும். இதில், சில முக்கிய பிரச்னைகளை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்புவா். அவற்றுக்கு அமைச்சா்கள் பதில் அளிக்க உள்ளனா்.
இதைத் தொடா்ந்து, காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கவுள்ளது. திங்கள்கிழமை கேள்வி நேரம் இல்லை. இதற்கான தீா்மானத்தை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, சனிக்கிழமை கொண்டு வந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. காவல் துறை மானியக் கோரிக்கையின்போது சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

