தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்
தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்ம பூஷண் விருது வழங்கப்படவுள்ளது.

நடிகர் அஜித் குமார்
Instagram | Ajith Kumar Racing Team

நடிகர் அஜித் குமார்
Instagram | Ajith Kumar Racing Team
தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது.
அதன்படி நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகியுள்ளனா்.
தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அஜித்குமாருக்கு விருது வழங்க உள்ளார்.
இதற்காக நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் தில்லி சென்றுள்ளாதத் தகவல் வெளியாகியுள்ளது.
சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...