விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

தேமுதிக இளைஞரணி செயலராக விஜய பிரபாகரன் நியமனம்!

தேமுதிக இளைஞரணி செயலராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி...
Published on

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரை இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்திருப்பதாக பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

அதன்படி, கட்சியின் அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக சதீஷ், தலைமை நிலையச் செயலராக பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலராக அழகாபுரம் ஆ. மோகன்ராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், வெறும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com