தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.1) முதல் ஆக.6 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
இதில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.1) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், தூத்துக்குடி - 101.84, நாகை, திருச்சி - (தலா) 101.3, மதுரைநகரம் - 101.12, பரமத்திவேலூா், தஞ்சாவூா் - (தலா) 100.4 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.