
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.
2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பார்க்கிங் பெற்றுள்ளது.
மேலும், தமிழில் சிறந்த துணைநடிகருக்கான விருதை படத்தின் இரண்டாம் கதைநாயகன்போல் வலம்வந்த எம்.எஸ். பாஸ்கர் வென்றுள்ளார்.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் 2023-ல் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங்.
இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். வாடகை வீட்டில் வசிக்கும் இருவர் நண்பர்களாக இருந்து எதிரிகளாக மாறுவதுபோன்ற படமாக அமைந்தது பார்க்கிங். இருவரின் தரப்பிலும் நியாயம் இருப்பதுபோலவும் காட்டப்பட்டது. வயதான பெரியவர் ஒருவர் மற்றும் புதிதாய் திருமணமான ஒருவருக்கும் இடையிலான ஈகோ-வை மையமாக வைத்து பார்க்கிங் கதைக்களம் அமைந்திருக்கும். வீட்டின் முகப்பில் யாருடைய காரை நிறுத்தலாம் என்ற போட்டியை வைத்தே படம் நகர்வதுடன், அந்த ஈகோவே இருவரின் அடிப்படைப் பண்பை மாற்றிவிடுவதாய் படத்தில் நம் கண்முன்னே காட்டியிருப்பர்.
இதையும் படிக்க: ரசிகர்களைக் கட்டிப்போடும் பார்க்கிங்: திரை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.