சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோவில் பயணிக்க முதலில் 'சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை'(CMRL) வழங்கப்பட்டது.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயிலில் ஒருங்கிணைந்து பயணிக்கக்கூடிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனால் சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை ரீசார்ஜ் செய்வது படிப்படியாக நிறுத்தப்பட்டது.
அதன்படி சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பழைய சிஎம்ஆர்எல் பயண அட்டை ரீசார்ஜ் நேற்றுடன் நிறுத்தப்பட்டது.
இன்று(ஆக. 1) முதல் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையான 'சிங்கார சென்னை' அட்டையைப் பயன்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பழைய சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையைக் கொடுத்துவிட்டு புதிய பயண அட்டையை கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதில் உள்ள தொகையும் புதிய அட்டைக்கு மாற்றி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை, க்யூஆர் கோடு மூலமாகவும் பயணசீட்டு பெற்று பயணிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.