
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று, அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.