தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநிலத்தவர்களைச் சேர்ப்பது தவறானது, அதுவும் ஒரு ஊழல்தான் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்வதற்காக சென்னையிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"வட மாநிலத்தவர்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவறான செயல். இதுவும் ஒரு ஊழல்தான். மேற்கு வங்கம்போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 7 லட்சம் அல்ல, அதற்கு மேல் எவ்வளவு சேர்த்தாலும் பரவாயில்லை. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
இன்னும் தேர்தலுக்கு 8 மாத காலங்கள் உள்ள நிலையில் மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.
திருப்பூரில் ரோந்து சென்ற எஸ்ஐ வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, டிஜிபி அளவில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. இதைப் பற்றி முதல்வர் கண்டுகொள்வதில்லை. ரிவ்யூ மீட்டிங்கூட செய்வதில்லை. இந்த ஆட்சி ஒரு மோசமான ஆட்சியாக உள்ளது" என்று கூறினார்.
ஓபிஎஸ் காட்டிய குறுஞ்செய்திதான் ஆதாரமா? என்று கேட்டதற்கு 'அதை அவரிடமே கேளுங்கள்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.