நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய தமிழக விவசாயிகள்.
நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய தமிழக விவசாயிகள்.

தமிழக விவசாயிகளுடன் பிரதமா் மோடி சந்திப்பு

தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
Published on

தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் புகைப்படங்களைப் பகிா்ந்து, பிரதமா் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டாா்.

அந்த பதிவில், ‘தமிழ்நாட்டைச் சோ்ந்த விவசாயிகள் குழுவினரை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். வேளாண்துறையில் புத்தாக்கம் மற்றும் உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவா்களின் இலக்குகள் மற்றும் அனுபவங்கள் பற்றி கேட்டறிந்தது உற்சாகமளித்தது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com