
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம்.
கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதனருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
கடல் நடுவே அமைந்துள்ள இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. அதோடு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலமும் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று(ஆக.08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.