சென்னை: மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும்.
இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. 11ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், தங்களை பொதுத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என சிறப்பான கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை
இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் பல்கலை. துணை வேந்தா்கள், கல்வியாளா்கள், ஆசிரியா்கள், தனியாா் பள்ளி நிா்வாகிகள், பெற்றோா் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்து கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசிடம் 2023ல் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் அதை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு நடத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அறிக்கை மீது அனைத்துத் தரப்பின் கருத்துகளைக் கேட்டறிந்து நிறைவு செய்யப்பட்ட நிலையில், முதல்கட்டமாக பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளஸ் 2 மாணவி தற்கொலை

2026-27 கல்வியாண்டு முதல் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயம்

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

