எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உரையில் எம்ஜிஆர் பற்றியும் குறிப்பிட்டேன். எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன்.
தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் பேசினேன். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆசையாகவும் அவருடைய முயற்சியாகவும் உள்ளது.
அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கும் ஆனால் அது கூட்டணி உறவை சிதைக்கும் அளவு இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்த பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதை அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை ஒரு ஜாதிக்குள் நான் சுருக்கவில்லை தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அது கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக நான் கூறினேன். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் ஜாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
Summary
Thol Thirumavalavan has said that he had no intention of insulting MGR.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொல். திருமாவளவனை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு

விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்
கூட்டணிக் கட்சிகளுக்காக தேர்தல் பணியாற்றாத விசிகவினர்: தொல் திருமாவளவன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



