
மாமல்லபுரம்: அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார், பாமகவில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
பாமக தலைவர் அன்புமணி தலைமையில, பொதுக் குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது.
திமுக அரசை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்த பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மனங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் உள்கட்சி தேர்தல்களை நடத்த ஓராண்டு அவகாசம் அளிக்கப்படும். அதுவரை தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்
பாட்டாளி மக்கள் கட்சியின் விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அறிவிக்காவிட்டால் அரசைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம்.
அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும், 19 : சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.