தொல். திருமாவளவன் (கோப்புப் படம்)
தமிழ்நாடு
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்
ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக் கண்டித்தும், ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தொல்.திருமாவளவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விசிக தலைவா் திருமாவளவன் பேசியதாவது: வாக்கு அரசியலுக்கு பயப்படாமல் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் நிகழ்கின்றன. ஹிந்துக்கள் எங்கெல்லாம் உள்ளாா்களோ, அங்கு ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஆணவக் கொலைக்கு சொத்து பிரச்னைதான் காரணம் என்றாா்.