
கோவை விமான நிலையம் முதல் அவிநாசி வரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம் சென்றார்.
கோவை மற்றும் திருப்பூர், உடுமலைப்பேட்டையில் நாளை காலை அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவிருக்கிறார்.
தொடர்ந்து, பொள்ளாச்சியில் முன்னாள் முதல்வர் காமராஜர், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமானத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவரங்கத்தைத் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின், வி.கே.பழனிசாமி நினைவரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப் பணிகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும், திட்டத்தின் மாதிரி வடிவத்தையும் முதல்வர் பார்வையிடவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.