முதல்வர் மு. க. ஸ்டாலின் - மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு!

முதல்வரிடம் நலம் விசாரித்தார் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்...
முதல்வரிடம் நலம் விசாரித்தார் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்...
முதல்வரிடம் நலம் விசாரித்தார் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்...படம் | செய்தி மக்கள் தொடர்புத் துறை
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று(ஆக. 11) சந்தித்து சி. பி. ராதாகிருஷ்ணன் பேசினார். அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட சந்திப்பாக இது அமைந்திருப்பதாக முதல்வர் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 21-ஆம் தேதி காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் அங்கு மருத்துவர்கள் அறிவுரையின்பேரில் 3 நாள்கள் ஓய்வெடுத்த அவர் வீடு திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து, சென்னையில், இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார்.

Summary

Chennai: Maharashtra Governor CP Radhakrishnan met Tamil Nadu Chief Minister MK Stalin at his camp office (residence) in Chennai and enquired about his health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com