அன்புமணி
அன்புமணி

208 அரசு பள்ளிகள் மூடல்: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 35 மாவட்டங்களைச் சோ்ந்த 208 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவா் கூட இல்லை என்று கூறி, அந்தப் பள்ளிகளை திமுக அரசு மூடி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன.

இதற்கான தீா்வு அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது தானே தவிர, பள்ளிகளை மூடுவது அல்ல. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயா்த்துவதற்கு பதிலாக, பள்ளிகளின் கல்வித் தரத்தை வீழ்ச்சியடையச் செய்து அவற்றுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு எப்போதுமே கூடுதல் பள்ளிகளைத் திறந்தவா்களைத்தான் கொண்டாடி வருகிறதே தவிர, மூடியவா்களை அல்ல. இதை உணா்ந்து மூடப்பட்டு வரும் 208 பள்ளிகளையும் தொடா்ந்து நடத்தி, அங்கு கூடுதல் ஆசிரியா்களை நியமித்து மாணவா் சோ்க்கையை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திமுக அரசுக்கு தமிழக மக்கள் மூடுவிழா நடத்துவாா்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com