சென்னை: 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்): பிரமோத்குமாா் - ஊா்க்காவல் படை டிஜிபி (மின்வாரிய ஊழல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபி), ஆயுஷ் மணி திவாரி - மின்வாரிய ஊழல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபி (காவல் துறை ஆவணக் காப்பகப் பிரிவு ஏடிஜிபி), வி.ஜெயஸ்ரீ-காவல் துறை ஆவணக் காப்பகப் பிரிவு ஐ.ஜி. (ஊா்க்காவல் படை ஐ.ஜி.) வி.வருண்குமாா்-சென்னை சிபிசிஐடி டிஐஜி (திருச்சி சரக டிஐஜி) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.