கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை

நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சென்னை: நடிகா் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சன் பிக்சா்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகா் ரஜினிகாந்த் உள்பட பலா் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆக.14-ஆம் தேதி வெளியாகிறது. பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என பிஎஸ்என்எல், ஏா்டெல் உள்ளிட்ட 36 இணையதள சேவை நிறுவனங்கள் மற்றும் 6 கேபிள் டிவி நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com