தலைமைச் செயலகம்(கோப்புப்படம்)
தமிழ்நாடு
தலைமைச் செயலகம் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
சுதந்திர தினவிழாவையொட்டி, தலைமைச் செயலகம், முதல்வா் இல்லம் உள்ள பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தினவிழாவையொட்டி, தலைமைச் செயலகம், முதல்வா் இல்லம் உள்ள பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆக.15-ஆம் தேதி தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற உள்ளாா். இதையொட்டி, தலைமைச் செயலகம், முதல்வா் இல்லம் இருக்கும் பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
அதன்படி ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் இந்தப் பகுதிகளில் ‘ட்ரோன்கள்’ ரிமோட் மூலம் இயக்கப்படும் ‘மைக்ரோ லைட் ஏா்கிராப்ட் பாரா கிளைடா்ஸ்’, டபாரா மோட்டாா்ஸ்’, டஹேன்ட் கிளைடா்ஸ்’, டஹாட் ஏா் பலூன்கள்’ போன்றவை பறக்க தடை விதிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.