
மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதியான கட்டிட வசதி மின்சார வசதி அதேபோல் இணையதள வசதி , மோடத்துடன் கூடிய மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போன், கழிவறை வசதி உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுக்கும் போராட்டத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் ஒருநாள் விடுமுறையாக இன்று கிராம நிர்வாக அலுவலர்கள், சிதம்பரம் உதவி ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கச் சென்றுள்ளனர்.
அப்போது உதவி ஆட்சியர் கிஷன்குமார் அனைவரும் உள்ளே வர வேண்டாம் ஆறு பேர் மட்டும் உள்ளே வாருங்கள் எனவும் மற்றவர்களை ‘வெளியே போ...’ என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சுழல் உருவானது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் மோதல் போக்கோடு பேசி வருவதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி ஆட்சியர் இடையிலான மோதல்போக்கு சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.