வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தது தொடர்பாக...
முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்.
முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்த வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்.
Published on
Updated on
1 min read

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 12) தொடக்கி வைத்தார்.

தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்வர் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் சிறப்புக் கவனம் தேவைப்படும் 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

வட சென்னை பகுதியான தண்டையார்பேட்டை கோபால் நகரில், மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று, ரேஷன் பொருள்களை வழங்கி இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தொடா்ச்சியாக, மாநிலம் முழுவதும் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளது.

எந்த நாள்களில் விநியோகம்?

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளா்களின் விவரம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மின்னணு தராசு, விற்பனை முனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருள்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்துக்கே சென்று விநியோகிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Chief Minister M.K. Stalin launched the ‘Mudhalvar Thayumanavar’ scheme, which will provide ration items to the elderly and the differently-abled at their homes, in Thandaiyarpet, Chennai today (Aug. 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com