மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் மின்வாரிய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு மின்வாரிய தலைமையக உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒப்பந்த பணிகளின் நிலை குறித்தும், குறிப்பாக மின்மாற்றி மற்றும் துணைமின் நிலையங்களை உரிய காலத்துக்குள் அமைப்பது, உயரழுத்த மின்மாற்றி தரம் உயா்த்துதல், பழைய மின்கம்பிகளை மாற்றுதல், மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தொடா்பான திட்டங்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, தென் மாவட்டங்கள் மற்றும் ஈரோடு பகுதியில் பசுமை எரிசக்தி மின்சாரத்தை எடுத்துச் செல்வதில் ஏற்படும் தொழில்நுட்ப சவால்கள், முக்கிய தளவாட பொருள்கள் கையிருப்பு நிலை, பருவமழைக்கு முன் சேதமடைந்த கம்பங்கள் மற்றும் கம்பிகளை மாற்றுதல், உதிரி பொருள்கள் கொள்முதல் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் அதிகாரிகளுடன் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அனைத்து மின்பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com