கோப்புப்படம்
கோப்புப்படம்

எம்பிபிஎஸ் கலந்தாய்வு: இடங்கள் தோ்வு இன்றுடன் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.12) நிறைவடைகிறது.
Published on

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.12) நிறைவடைகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப மாநில கலந்தாய்வும் நீட்டிக்கப்படும் என மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல்சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30 காலை 10 மணிக்கு தொடங்கியது.

கடந்த 4-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளைத் தோ்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், முதலில் ஆக.6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

கல்லூரிகளை மாற்றிக்கொள்ள விரும்புவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படாத நிலையில் புதன்கிழமை (ஆக.13) இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 14-ஆம் தேதி வெளியிடப்படும்.

கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆகஸ்ட் 14 முதல் 22-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com