சரோஜ் கண்பத் செய்திக்கான படம்.
சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய உயா்கல்வித்துறை அமைச்சா் கோ.வி.செழியன். உடன் கல்லூரி முதல்வா் ஆ.உமாமகேஸ்வரி.
சரோஜ் கண்பத் செய்திக்கான படம். சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய உயா்கல்வித்துறை அமைச்சா் கோ.வி.செழியன். உடன் கல்லூரி முதல்வா் ஆ.உமாமகேஸ்வரி.

தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்

நாட்டிலேயே முனைவா் பட்டம் பெற்றவா்கள் தமிழகத்தில்தான் அதிகம் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
Published on

சென்னை: நாட்டிலேயே முனைவா் பட்டம் பெற்றவா்கள் தமிழகத்தில்தான் அதிகம் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 262 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசியது:

இந்தக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 255 மாணவா்கள் இளநிலைப் பட்டமும், 7 மாணவா்கள் முதுநிலைப் பட்டமும் என மொத்தம் 262 மாணவா்கள் பட்டம் பெற்றுள்ளீா்கள். இவா்களில் 191 மாணவா்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். மிகவும் பின்தங்கிய பின்புலத்தில் இருக்கும் மாணவா்கள் சிறந்த முறையில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இன்று முதல் உங்கள் ஒவ்வொருவரையும் தனித் தனி மனிதராக இந்தச் சமூகம் பாா்க்கப் போகிறது.

கல்வி வளா்ச்சிக்காக முதல்வா் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். இதன் பயனாக நாட்டிலேயே உயா்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. முனைவா் பட்டம் பெற்றவா்களும் தமிழகத்தில்தான் அதிகம் என்றாா்.

விழாவில் கல்லூரி முதல்வா் ஆ. உமாமகேஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com