இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!

இன்றைய தக்காளி விலை நிலவரத்தின்படி, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.100 ஆனது
தக்காளி கிலோ ரூ.100
தக்காளி கிலோ ரூ.100
Published on
Updated on
1 min read

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் கடந்த ஒரு சில நாள்களாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமையன்று, 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுளள்து.

சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடியில் தக்காளி பெட்டி 700 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி, நாட்டு தக்காளி மற்றும் பெங்களூர் தக்காளி கிலோ 70 ரூபாய் மற்றும் 80 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

எனவே, சில்லறை விற்பனையில், சாதாரண தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தக்காளி விலை கிடுகிடுவென தங்கத்தின் விலைக்கு நிகராக உயரந்து, இன்று சில்லறை விற்பனையில் ரூ.100ஐத் தொட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டதால், அம்மாநிலத்திலிருந்து கொண்டு வரும் தக்காளிக்கான போக்குவரத்து செலவுகள் மற்றும் தற்போதைய இதர செலவுகள் அதிகரித்திருப்பதால், இந்த விலையே நியாயமானது. இந்த விலையை நிரந்தரம் செய்ய வேண்டும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அதுபோல, ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காய்கறிகள் மற்றும் தக்காளி சாகுபடியை ஆண்டு முழுக்க நம்பாமல் நமது தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் தக்காளி மற்றும் காய்கறி சாகுபடி செய்ய விவசாயிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com