முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி!

பழனி முருகன் கோயிலில், முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு.
முதல்வர் ஸ்டாலின் - அன்புமணி
முதல்வர் ஸ்டாலின் - அன்புமணி
Published on
Updated on
1 min read

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழனி முருகன் கோயிலில், பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பதுதான்.

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ’ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

PMK leader Anbumani Ramadoss has raised a question as to when Chief Minister M.K. Stalin turned into a villain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com