அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

இன்று திமுக மாவட்ட செயலா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது.
Published on

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் ஓரணியில் தமிழ்நாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதியுடன் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படும் சூழலில், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த முடிவு திமுக மாவட்ட செயலா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com