ஒருகால பூஜை திட்ட கோயில்களின் அா்ச்சகா்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
Published on

ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

ஒருகால பூஜை திட்ட கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்களின் வாரிசுகள் 600 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 10 மாணவா்களுக்கு தலா ரூ.10,000-க்கான வங்கி வரைவோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதன்மூலம் அரசு, தனியாா் கல்லூரிகளில் உயா்கல்வி பயிலும் அா்ச்சகா்களின் பிள்ளைகள் பயன்பெறுவா்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் உதவி ஆணையா் பணியிடத்துக்கு 21 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன உத்தரவுகளையும் முதல்வா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com