
தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர் செல்வோர் மாற்று வழிகளையும் பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளை(ஆக. 15) முதல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள், தொடர் விடுமுறையைக் கொண்டாட தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட சாலைகளையும் பயன்படுத்துமாறு காவல் துறை அறிவுறித்தியுள்ளது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடப்பதால் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரே வழியைப் பயன்படுத்தாமல் மாற்று வழிகளையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.