சுதந்திர நாள்: 15  காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பதக்கங்கள் குறித்து...
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

2025ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு 15  காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல்துறை அதிகாரிகளுக்கு, 2025-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டும், தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் விவரம்:

1. க.த. பூரணி, காவல் துணை கண்காணிப்பாளர் ,சென்னை.

2. பி. உலகராணி, காவல் ஆய்வாளர், திருநெல்வேலி.

3. மா.லதா, காவல் ஆய்வாளர், சென்னை.

4. மு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், சேலம் மாவட்டம்.

5. ஜெ.கல்பனாதத், துணைக் காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர்.

6. வே.சந்தானலெட்சுமி, காவல் ஆய்வாளர், திண்டுக்கல்.

7. மா.வசந்தகுமார், காவல் ஆய்வாளர், திருப்பூர் மாவட்டம்.

8. வெ.ஜெகநாதன், காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.

9. கோ.திலகாதேவி, காவல் ஆய்வாளர், அரியலூர்.

10. இரா.புவனேஸ்வரி, காவல் ஆய்வாளர், நாகப்பட்டினம்.

இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் விவரம்:

1. மஹேஷ்வர் தயாள், கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர், சென்னை.

2. ஜெ. மகேஷ், காவல் துறைத் துணைத் தலைவர், நுண்ணறிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), சென்னை.

3 நை. சிலம்பரசன், காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்டம். 

4. கு. பிரவின் குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,   தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, தலைமையகம், சென்னை.

5. தா.மேரிரஜு காவல் ஆய்வாளர், சென்னை பெருநகர காவல் துறை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இந்த விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Special medals have been announced for 15 police officers on the occasion of Independence Day 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com