
சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் பெரிய கோவில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பாரம்பரிய சின்னங்கள் மற்றும் நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு - மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோவிலில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு உள்ளே நுழையும் ராஜராஜன் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் மற்றும் பாதுகாப்பு கருவி மூலம் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.