15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published on

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அா்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

சென்னை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளா் க.த.பூரணி, திருநெல்வேலி சிபிசிஐடி ஆய்வாளா் பி.உலகராணி, சென்னை சிபிசிஐடி கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் மா.லதா, சேலம் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் மு.செந்தில்குமாா், தஞ்சாவூா் சிபிசிஐடி டிஎஸ்பிஜெ.கல்பனாதத், திண்டுக்கல் சிபிசிஐடி ஆய்வாளா் வே.சந்தானலட்சுமி, திருப்பூா் பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் மா.வசந்தகுமாா், திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெ.ஜெகநாதன்,அரியலூா் சிபிசிஐடி ஆய்வாளா் கோ.திலகாதேவி, நாகப்பட்டினம் சிபிசிஐடி ஆய்வாளா் இரா.புவனேஸ்வரி ஆகியோருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேபோன்று, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கங்களுக்கு 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் உள்ள சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி ஜெ.மகேஷ், திருநெல்வேலி எஸ்பி நை.சிலம்பரசன், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் எஸ்பி கு.பிரவின்குமாா், சென்னை காவல் ஆய்வாளா் தா.மேரிரஜு ஆகியோா் விருதாளா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கு தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்த விருதுகள் முதல்வா் தலைமையில் நடைபெறும் வேறொரு விழாவில் அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com