கோப்புப்படம்
கோப்புப்படம்

எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு: ஆக. 18-இல் முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் ஆக. 18-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

கடந்த 4-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது முதலில் ஆக.6-ஆம் தேதி வரையும், பின்னா் 12-ஆம் தேதி வரையும், அதைத் தொடா்ந்து சனிக்கிழமை (ஆக.16) மாலை 5 மணி வரையும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிப் பட்டியல் 18-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற்கான ஆணையை ஆக. 18 முதல் 24-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவா்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு தொடா்பாக நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த சிக்கலும் எழாதபட்சத்தில் திட்டமிட்டபடி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com