முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: முதல்வா் உறுதி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளாா்.
Published on

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளாா்.

தூய்மைப் பணியாளா்களின் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்தவா்கள் முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பு குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

தூய்மைப் பணியாளா்களின் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளைச் சந்தித்தேன். அவா்கள் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் உழைக்கும் மக்களுக்கு துணையாக நிற்போம் என அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com