
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நெல்லையில் நாளை (ஆக.17) பாஜக பூத் முகவர்கள் மாநாடு நடைபெறவிருந்தது. பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மறைவையடுத்து இந்த மாநாடு ஆக. 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் ஆக. 22 ஆம் தேதி நடைபெறும் இந்த பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.