
மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆக. 15) மாலை காலமானார்.
இல. கணேசனின் மறைவுக்கு பாஜக தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக இல. கணேசனின் உடலுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அஞ்சலி செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.