
சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகுபதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
மேலும் இறுதிச்சடங்கு நிகழ்வில் ஆளுநர் ரவி, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு நாகாலாந்து முதல்வர் நீபியு ரியோ அஞ்சலி செலுத்தினார். நாகாலாந்து தலைமைச்செயலர், டிஜிபி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆக. 15) மாலை காலமானார்.
இல. கணேசனின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.