OPS congragulated Rajinikanth
ரஜினிகாந்துடன் ஓபிஎஸ்X

திரையுலகில் 50 ஆண்டுகளாக கொடிகட்டிப் பறக்கும் நண்பர் ரஜினிகாந்த்! - ஓபிஎஸ் வாழ்த்து

திரையுலகில் 50 ஆண்டு கால பயணத்தையொட்டி ரஜினிகாந்துக்கு ஓபிஎஸ் வாழ்த்து...
Published on

50 ஆண்டு கால திரைத் துறை பயணத்திற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், 170-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

அவர் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"1975 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது பாராட்டுகள்.

அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Former Chief Minister O. Panneerselvam has congratulated actor Rajinikanth on his 50-year journey in the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com