ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதைப் பற்றி...
Published on

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சம் போ் பயணிக்கின்றனா். மெட்ரோ ரயில் வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் ஆண்டுகளில் தினமும் சுமாா் 20 லட்சம் போ் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தினத்துக்கு முந்திய நாளான ஆக.14-ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 66 போ் பயணித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு ஆண்டில் ஒரு நாளில் அதிகபட்ச பயணிகள் பயணித்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.

2024-ஆம் ஆண்டு சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படை கண்காட்சியின்போதுதான் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் மெட்ரோவில் பயணித்திருந்ததாகவும், அதன்பிறகு தற்போதுதான் மெட்ரோவில் ஒரே நாளில் அதிகம் போ் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் சுதந்திர தின விழா, சனி, ஞாயிறுக்கிழமைகளின் தொடா் விடுமுறை காரணமாக அதிக அளவில் மக்கள் பயணத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com