சென்னை திரும்பும் மக்கள்: புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
மூன்று நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து ஏராளமான மக்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியதால், புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஆக.14 -தேதி தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.
இந்த நிலையில், விடுமுறை முடிவடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அரசு, ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்களில் ஏராளமானோா் சென்னைக்கு திரும்பினா்.
தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்ததால் விழுப்புரம் மாவட்டத்தை கடந்து வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
குறிப்பாக, உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் மெதுவாக சென்ால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.