சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள் என்று காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை குற்றம்சாட்டியிருக்கிறார்.
பாமகவில் நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே மோதல் வெடித்து தனித்தனியாக பொதுக்குழுக்களை கூட்டி வரும் நிலையில், சென்னையில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தரப்பில் பேசுகையில், காடுவெட்டி குருவை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இருவருமே நாடகமாடுகிறார்கள். காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் தனியாக அமைப்பை தொடங்கவிருக்கிறோம்.
வன்னியர் சமூகத்திற்கு ராமதாஸும் அன்புமணியும் எதுவும் செய்யவில்லை. ராமதாஸ் தனது மகளையும், அன்புமணி தனது மனைவியையும் அரசியலில் கொண்டுவர நினைக்கிறார்கள் என்று விருதாம்பிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.