விஜய்
விஜய்Youtube/TVK

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Published on

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தவெக மீதான தமிழக மக்களின் பேரன்பும் பேராதரவும் தோ்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. 1967 மற்றும் 1977 தோ்தல்களின் வெற்றி விளைவுகளை 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம்.

மதுரையில் நடைபெறவுள்ள தவெக மாநாட்டை கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவா்கள், உடல்நலம் குன்றியோா், பள்ளிச் சிறாா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வந்து திரும்பும்போது தொண்டா்கள் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். மகத்தான தோ்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழக மண்ணில், நம்மால் நிகழப்போவது நிஜம். அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணா்வு ததும்பும் மதுரை மண்ணில் இதயம் திறந்து 2 கைகளையும் விரித்துக் காத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளாா் விஜய்.

X
Dinamani
www.dinamani.com