எதேச்சதிகாரத்துக்கு எதிராக சுதர்சன் ரெட்டி சரியான தேர்வு: மு.க. ஸ்டாலின்

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் வாழ்த்து.
சுதர்சன் ரெட்டி
சுதர்சன் ரெட்டிIANS
Published on
Updated on
1 min read

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று (ஆக. 19) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கியவர் சுதர்சன் ரெட்டி. தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர்.

நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.

சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது.

இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை!

கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு'' என மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக சுதர்சன் ரெட்டி இருப்பார்! - கார்கே

Summary

Sudarshan Reddy is the right choice against autocracy M.K. Stalin wishes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com