
50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, மனைவி துர்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருமண நாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான மு. கருணாநிதியின் நினைவிடத்துக்கு மனைவி துர்காவுடன் இன்று காலை சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாயிடம் வாழ்த்து பெற்ற புகைப்படத்தையும் பகிர்ந்து மனைவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்.
அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி! எதிர்பார்ப்புகளற்ற அன்பும் - விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.