ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

தவெக மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம்..

Student dies after being electrocuted

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவன்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாமகரிசல் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன்(19). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விஜய் ரசிகரான காளீஸ்வரன், ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பி எடுக்கச் சென்று உள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையிலிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்தபோது, உயர் அழுத்த மின் ஒயரில் கம்பி உரசியதில் காளீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் காளீஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Tragically, a college student died after being electrocuted while bringing wire to hang a flex banner for the Thaweka conference.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.