
தமிழக வெற்றிக் கழகத்தில் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன் நாளை (ஆக.21) பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதற்காக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தவெக தலைவர் விஜய்யும் சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டுவிட்டார்.
மாநாட்டையொட்டி பாதுகாப்புக்காக 3000 காவலர்களும், தவெக சார்பில் 2000 பவுன்சர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல், அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது மாநாடு நடக்கும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.