
மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் நிகழ்வுகள் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற பகுதியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாட்டுக்கான நிகழ்வுகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளன.
சுமார் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடை, விஜய் தொண்டர்களை நடந்து வந்து சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டர்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் 200 ஏக்கர் பரப்பிலும், 306 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழாய்கள் மூலமும் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
காலை 10 மணி அளவில் மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின. கடும் வெய்யில் காரணமாக தரை விரிப்புகளைக் கிழித்து தற்காலிக கூடாரம் அமைத்து தங்களைத் தற்காத்துக் கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு அக்டோபரில் தவெகாவின் முதல் மாநாடு விரக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இன்று மதுரையில் இரண்டாம் மாநாடு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.