மதுரை தவெக மாநாட்டுத் திடலில் அவசர மருத்துவ உதவிக்காக 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 600 மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்காக அப்பகுதியில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவ செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அடிப்படை மருத்துவ வசதிகளுடன் 600 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் இருந்தும் மருத்துவக் குழுவினரை அழைத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.