தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?

தவெகவின் மதுரை மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
tvk conference 6-resolutions passed
மாநாட்டில் விஜய்.
Published on
Updated on
1 min read

தவெகவின் மதுரை மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில்,

• பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்.

• சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

• தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்.

• ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

• தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.

• அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், டிஎன்பிஎஸ்சி(TNPSC) உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! விஜய் குட்டிக் கதை!

மதுரை மாவட்டம், பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் பேசிய விஜய், பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.

மறைமுகக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்.

2026 பேரவைத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும், எப்படிபட்ட ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com